தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 250 ரூபாய் என தக்காளி விற்பனை ஆகி வருவது குறித்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி வரத்து குறைவு மற்றும் கன மழை காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 200 முதல் 250 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் தக்காளி விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாது என்பதால் பொதுமக்கள் தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.