மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

Siva

ஞாயிறு, 27 ஜூலை 2025 (08:55 IST)
மேற்கு வங்காளத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோத குடியேறிகள் என பாஜகவின் முக்கிய தலைவர் சுவேந்து அதிகாரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வை மேற்கோள் காட்டியே, மேற்கு வங்கத்திலும் இதேபோன்ற நடவடிக்கை தேவை என பாஜக வலியுறுத்தி வருகிறது.
 
சுவேந்து அதிகாரி தனது குற்றச்சாட்டில், மேற்கு வங்கத்தில் உள்ள 1.25 கோடி வாக்காளர்கள் வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், இவர்கள் அடையாளம் காணப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் போது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சுவேந்து அதிகாரி எச்சரித்துள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்