திரையரங்க டிக்கெட் விலை உயர்வுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு!

வியாழன், 6 ஜூலை 2023 (07:32 IST)
சமீபத்தில் சினிமா டிக்கெட் கட்டணத்தை  உயர்த்திக் கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ் நாடு அரசிடம் மனு கொடுத்துள்ளது. அதில், தமிழ் நாட்டில் உள்ளள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ.250 ஆகவும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 ஆகவும்,  Non- AC  திரையரங்குகளுக்கு ரூ.120 ஆகவும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இந்த கோரிக்கைக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சினிமா டிக்கெட் விலை மற்றும் திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை எல்லாம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விலையேற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள மாநாடு உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “ஏற்கனவே திரையரங்குக்கு வர நினைப்பவர்கள் விலைவாசியாக் ஹோம் தியேட்டருக்குள் புகுந்து கொண்டு விட்டார்கள்.  மேலும் டிக்கெட் விலையை அதிகப்படுத்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள். விலையை உயர்த்தினால் சிறிய படங்களின் நிலை என்னவாகும்.  அரசும் தியேட்டர் ஓனர்களும் ரசிகர்களின் நிலையையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்