பிரதமர் மோடியை சந்தித்தபோது மனு அளித்த எடப்பாடியார்? - மனுவில் இருந்தது என்ன?

Prasanth K

ஞாயிறு, 27 ஜூலை 2025 (09:42 IST)

நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்தார்.

 

நேற்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த பிரதமர் மோடி, அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி, டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்றடைந்தார் பிரதமர் மோடி.

 

அப்போது அங்கு அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினார். அப்போது மனு ஒன்றையும் பிரதமர் மோடியிடம் அளித்தார். அதில் 3 முக்கிய கோரிக்கைகளை அவர் முன் வைத்துள்ளார். அந்த கோரிக்கைகளாவன:

விவசாய கடன் வழங்குவதற்கு விவசாயிகளுக்கு உள்ள சிபில் ஸ்கோர் முறையில் இருந்து விதிவிலக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு உதவும் வகையில் சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து பிரத்யேக வழித்தடம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும்

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்