தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Prasanth K

ஞாயிறு, 27 ஜூலை 2025 (10:30 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நாய் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில் நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும் தெருநாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமீபமாக பல இடங்களில் தெருநாய்கள் பல நோய்வாய்ப்பட்டு வரும் நிலையில், அவற்றால் பிற நாய்களுக்கு தொற்று பரவுவது, மனிதர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அவற்றை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு, பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலமாக இந்த கருணைக் கொலையை செய்ய வேண்டும் எனவும், கொல்லப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அரசாணை பிறப்பித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்