கள்ளக் காதலை நிறுத்தியதால் கொலை செய்யப்பட்ட பெண்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:03 IST)
ரவுடி கிருஷ்ணன் என்பவரின் மனைவியை அரவிந்த் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் ரவுடி கிருஷ்ணன். இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது போலிஸாரோடு ஏற்பட்ட மோதலால் என்கௌண்ட்டர் செய்யப்பட்டு இறந்தார். இந்நிலையில் கிருஷ்ணனின் மனைவிக்கும் கிருஷ்ணனின் உதவியாளர் அரவிந்த் என்பவரோடு காந்திமதிக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.

ஆனால் உறவினர்கள் கண்டித்ததால் அரவிந்தோடு பழக்கத்தை நிறுத்தியுள்ளார் காந்திமதி. இதில் அரவிந்த் ஆத்திரமாகி காந்திமதிக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அதை காந்திமதியும் உறவினர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் காந்திமதி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்தக் கொலைக்கு பின்னர் அரவிந்த் இருப்பதை இப்போது போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்