பாஜக முன்னாள் அமைச்சர் தற்கொலை

திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:23 IST)
சத்தீஸ்கரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் பால்சிங் பாட்டியா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜ்நந்த்கான் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர பால்சிங் பாட்டியா சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர். குஜ்ஜி சட்டமன்ற தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் இவர் தனது அறையில் தூக்கிய தொங்கிய நிலயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்