கள்ளக்காதலுக்கு இடையூறு; 7 வயது சிறுமியை கொன்று வீசிய தாய், காதலன் கைது!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:57 IST)
தஞ்சாவூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 7 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் கோரிக்குளம் பகுதியை சேர்ந்த ரங்கேஸ்வரன் என்பவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். சில ஆண்டுகள் முன்னதாக ரங்கேஸ்வரன் காலமான நிலையில் விஜயலட்சுமி, தனது உறவினரான வெற்றிவேல் என்பவருடன் ரகசிய தொடர்பில் இருந்ததாக தெரிகிறது.

வெற்றிவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இந்த உறவு குறித்து உறவினர்கள் கண்டித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வெற்றிவேலின் உறவுக்கு விஜயலட்சுமியின் 7 வயது மகள் வித்யா இடையூறாக இருந்ததால் ஆத்திரமடைந்த வெற்றிவேல் சிறுமியை தாக்கியுள்ளார்.

இதனால் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை தாயும், கள்ளக்காதலனுமே கல்லணை கால்வாயில் வீசியுள்ளனர். இறந்த குழந்தையின் புகைப்படத்தை வெற்றிவேல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியான அந்த பெண் இதுகுறித்து தன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் அளித்த புகாரின் பேரில் வித்யாவின் தாய் விஜயலட்சுமி, கள்ளக்காதலன் வெற்றிவேலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்