வீட்டுக்கு வீடு ரூ.50 ஆயிரம்: பணத்தில் மிதக்கும் ஆர்.கே.நகர்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (22:29 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் பிரச்சாரம் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்சி ரூ.2000, இன்னொரு கட்சி ரூ.5000, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ரூ.10000 என்ற விகிதத்தில் பணப்படுவாடா நடந்து கொண்டிருப்பதாகவும், ஒரு வாக்காளருக்கு ரூ.18000 என்றால் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சுமார் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த முறை ஆர்.கே.நகர் மக்கள் புத்திசாலித்தனமாக அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்தை நகைகள் வாங்கி சேமித்து வைப்பதாகவும், சிலர் அடகில் வைத்த நகையை மீட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலின்போது கிடைக்கும் பணத்தை வைத்து ஆடம்பர செலவு செய்யாமல் புத்திசாலித்தனமாக சேமித்து வைக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஒருவகையில் பாராட்டப்பட வேண்டியவர்களே என்று அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி  விவாதங்களில் பேசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்