கேட்டது ரூ.900 கோடி கொடுத்தது ரூ.325 கோடி, அதிலும் மூன்றில் ஒரு பங்கு

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (22:11 IST)
ஓகி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு இன்று நிவாரண அறிவிப்பை பிரதமர் மோடி அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று லட்சத்தீவு, கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் பிரதமர் மோடி நேரடியாக சென்று பார்வையிட்டார்.

அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்ட பிரதமர் பின்னர் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவுக்கு ரூ.325 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். மேலும் புயலால் முழுமையாக சேதமடைந்த சுமார் 1400 வீடுகள் மறுசீரமைப்பு செய்து தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த ரூ.325 கோடி என்பது தமிழகத்திற்கு மட்டும் அல்ல, கேரளா, லட்சத்தீவு ஆகியவற்றுக்கும் சேர்த்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரதமரை சந்தித்த முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பிரதமரிடம் ரூ.900 கோடி நிவாரண நிதி கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேட்டது ரூ.900 என்ற கோடி என்ற நிலையில் அறிவிக்கப்பட்டது. அதைவிட பல மடங்கு குறைவு என்பதால் குமரி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்