ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

Mahendran

திங்கள், 2 டிசம்பர் 2024 (13:31 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக இருந்த ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட இருப்பதாகவும், ஷிண்டேவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், முடிவு அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் ஆட்சி அமையவில்லை. முதல்வர் பதவியை பாஜகவுக்கு தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித்  பவார்   தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக இருப்பதாகவும், ஷிண்டேவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை, ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக பதவி ஏற்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
 
டிசம்பர் 5ஆம் தேதி பாஜகவின் முதல்வராக பட்னாவிஸ் பதவி ஏற்க இருப்பதாகவும், அஜித் பவார் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் துணை முதல்வராக பதவியேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்