9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த இளம்பெண் - காரணம் இதுதான்

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (11:34 IST)
சென்னை துரைப்பாக்கத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

 
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் பிரியங்கா என்ற இளம்பெண்.  பற்பல ஆசைகளோடும் கனவுகளோடும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் இருந்த அந்த இளம்பெண் நேற்று மாலை திடீரென ஆஃபிஸின் 9 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியங்கா வேலைப் பளுவின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உயரதிகாரிகளின் நெருக்கடியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
 
விசாரணையில், ஆந்திராவை சேர்ந்த பிரியங்கா சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார். வீட்டில் அவரின் பெற்றோர்கள் அவர்களுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால், தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என பிரியங்கா வாக்குவாதம் செய்துள்ளார். அதன் பின்னர்தான் தான் பணி புரியும் கட்டிடத்தின் 9வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்