கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 19 சென்னை பக்தர்களுக்கு திடீர் சிக்கல்

திங்கள், 2 ஜூலை 2018 (21:30 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைலாஷ் யாத்திரைக்கு செல்வதுண்டு. பனிலிங்கம் உள்பட பல அற்புதமான தரிசனங்களை பக்தர்கள் பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு யாத்திரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் இந்த யாத்திரையில் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் கைலாஷ் யாத்திரைக்காக சென்ற சென்னையை சேர்ந்த 19 பக்தர்கள் நேபாளத்தின் சிமிகோட் என்ற பகுதியில் சிக்கி தவித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நேபாள நாட்டில் உள்ள சமிட் ஏர் நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 19 தமிழக பக்தர்களும் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
மேலும் வேலைநிறுத்தம் முடிவடைந்தாலும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் 19 பக்தர்களின் சென்னை வருகை சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் சென்னை திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்