தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியங்கா வேலைப் பளுவின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உயரதிகாரிகளின் நெருக்கடியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர சம்பவத்தால் பிரியங்காவின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.