பொன்னியின் செல்வன் ''ராட்சச மாமனே'' லிரிக்கல் பாடல் ரிலீஸ்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (18:24 IST)
பொன்னியின் செல்வன் என்ற  படத்தின்  ''ராட்சச மாமனே'  என்ற  லிரிக்கல் பாடல் ரிலீஸாகியுள்ளது.

செல்வன் என்ற  நாவலை இயக்குனர் மணிரத்னம் பெரும்,    பொருட்செலவில் படமாக இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர்  பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
 

ALSO READ: இன்று ''ராட்சச மாமனே'' தினம்--- பொன்னியின் செல்வன் படக்குழு அறிவிப்பு

ரிலீஸூக்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இந்நிலையில்,  பொ.செ., படத்தில் இடம்பெற்றுள்ள  ‘’ராட்சச மாமனே’’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ  இன்று மாலை  6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்துள்ள இப்பாடலில், கார்த்தி மற்றும் த்ரிஷா இடம்பெற்றுள்ளன  ஜிலிம்ப்ஸ் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த  நிலையில், ராட்சச மாமனே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்