இன்று ''ராட்சச மாமனே'' தினம்--- பொன்னியின் செல்வன் படக்குழு அறிவிப்பு

செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (15:08 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படக்குழு இன்று ''ராட்சச மாமனே'' என்ற பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
 

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன் 
 ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி1-2 ஆகியவை பிரமாண்ட படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.

இதையடுத்து, பொன்னியின் செல்வன் என்ற  நாவலை இயக்குனர் மணிரத்னம் பெரும்    பொருட்செலவில் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

ரிலீஸூக்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இந்நிலையில் ,  பொ.செ., படத்தில் இடம்பெற்றுள்ள  ராட்சச மாமனே என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ  இன்று மாலை  6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

ஏ. ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்துள்ள இப்பாடலில், கார்த்தி மற்றும் த்ரிஷா இடம்பெற்றுள்ளன  ஜிலிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

You say it's Tuesday. We say it's Vibe to 'Ratchasa Maamaney' ~ 'Rakshas Mama Re' ~ 'Raachasa Maavaya' ~ 'Rakshasa Maamane' day!

Lyric video - out today at 6 PM!#PS1 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/AqfRgp5sXe

— Lyca Productions (@LycaProductions) September 13, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்