செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள இப்படம் வரும் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இப்படத்தின் புரம்மோஷன் வேலைகளில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், 1788 இணையதளங்களில் இப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேர்ண்டுமென தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனவே இந்த வழக்கு மீதான விசாரணையில் நீதிபதி, கோப்ரா படத்தை சட்ட விரோதமான இணையதளங்களில் வெளியிடத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.