2021ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால், இம்முறை அந்த தொகுதியில் திமுக போட்டியிடுவது கூட்டணி கட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருப்பவர் விசி சந்திரகுமார். இவர் தற்போது திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், மேலும் அதிமுக உள்பட சில முக்கிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் திமுக அமோக வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று கருதப்படுகிறது.