அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், எதிர்கட்சிகளுக்கு மட்டும் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை என பாமக தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தடையை மீறி போராட்டம் நடத்திய திமுகவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுரை கூறிய நீதிமன்றம், "ஒரு தரப்புக்கு ஒரே நாளில் அனுமதி அளித்து, மற்றவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யாமல் இருப்பது ஏற்கக்கூடாது," என்றும் தெரிவித்தார்.