பொன்னியின் செல்வன்- 1 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (20:20 IST)
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்  -1 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை  இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ‘’பொன்னி நதி’’ என்ற பாடல் ரிலீஸானது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்பத்தின்  கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பு பற்றிய வீடியோ  வைரலாகி வருகிறது.
 

Here's a glimpse of #PonniNadhi from @arrahman's Houston concert!

Full performance at 12 PM tomorrow!#PS1 In theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!#PonniyinSelvan #ManiRatnam #ARRahman @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/NwaSWI5cUt

— Madras Talkies (@MadrasTalkies_) August 12, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்