தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

Siva
திங்கள், 17 ஜூன் 2024 (08:29 IST)
தமிழகத்தில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைகாலம் முடிவடைந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் சென்னை உள்பட பரவலாக மாநிலம் முழுவதும் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தமிழகத்தின் சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் நாளை முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யும் என்று அதே நேரத்தில் சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மாலை மற்றும் இரவு வேளையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்