தமிழகத்தில் ஜூன் 18 வரை மழை தொடரும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran

புதன், 12 ஜூன் 2024 (15:35 IST)
தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்து தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ஜூன் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 18ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் காரைக்கால் புதுவை ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்காலில் இயல்பை விட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்