ஆனால் அதே நேரத்தில் ஜூன் 18ஆம் தேதி வரை இயல்பை விட அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது