தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

vinoth

ஞாயிறு, 16 ஜூன் 2024 (08:10 IST)
தமிழகத்தில் கோடை வெய்யில் தாங்க முடியாத அளவுக்கு அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்ல யோசிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் ஒருவாரத்துக்கு மேல் வெப்பச் சலனமழை பெய்து ஓரளவுக்கு வெயில் தணிந்தது.

அதன் பின்னர் மீண்டும் வெயில் அடிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்க மழை பெய்து வரும் நிலையில் இன்றிலிருந்து ஜூன் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

19 ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் அடுத்த இரண்டு நாட்கள் லேசான மழையும் பெய்யக் கூடும் என சொல்லப்படுகிறது. சென்னையில் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்யக் கூடும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்