சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் நேற்று சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக தேனாம்பேட்டை, அடையாறு, மயிலாப்பூர், சேப்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறியது.