வெட்கமில்லாத அரசியல் தலைவர்கள் - விளாசும் ஆர்.ஜே.பாலாஜி

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (17:01 IST)
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆர்.ஜே.பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது தமிழகத்தில் பூதாகாரமாய் வெடித்துள்ளது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர் சிலரும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. 
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி “அனிதாவின் மரணத்திற்கு வருந்துகிறேன். வெட்கமும், தகுதியும், பொறுப்பும் இல்லாத ஊழல்வாதி அரசியல்வாதிகளுக்காக, ஏழை மாணவர்கள் தங்கள் கல்வியைத்தான் தியாயம் செய்து வந்தனர். தற்போது உயிரையும் தியாகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்