கோவையில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 12 கார்கள் காவல்துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
கோவையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன. இதுகுறித்து இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் கோவையில் சந்தேகத்திற்கு இடமாக சாலையோரம் 12 கார்கள் இருந்த நிலையில் அந்த கார்களை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். கோவை வின்சன்ட் சாலையில் உள்ள இந்த கார்களில் நான்கு கார்கள் யாரும் உரிமை கோராத நிலையில் அந்த நான்கு கார்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகிறது