''காந்தாரா'' இந்தியாவின் சிறந்த படம் - சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (15:39 IST)
காந்தாரா  படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினரை பாராட்டி டுவிட் பதிவிட்டுள்ளார்.

கேஜிஎஃப்-1 ,2 ஆகிய படங்களுக்குப் பின் கன்னட சினிமாவின் மீது சினிமா ரசிகர்கள் பார்வை குவிந்துள்ளது. பல வித்தியாசமான படங்களை கொடுக்கும் கன்னட சினிமாவில் சமீபத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் காந்தாரா.

இப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னடமொழியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது.  இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ளார்.

இப்படம் அக்டோபர் 15( நாளை) தமிழகத்தில் டப் செய்யப்பட்டு ரிலீஸானது. இப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்,  ''தெரிந்ததைக் காட்டிலும் தெரியாததே அதிகம். அதை இப்படத்தைக் காட்டிலும் யாராலும் சொல்லியிருக்க முடியாது. இப்படத்தைப் பார்த்தேன். என்னை மெய்சிரிக்க வைத்தது. இந்திய சினிமாவின் சிறந்த படைப்பு எனப் புகழ்ந்து, ரிஷப் ஷெட்டி, உள்ளிட்ட நடிகர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்..
அடுத்த கட்டுரையில்