கமல் மீது வழக்கு பதியலாமா? காவல்துறை அவசர ஆலோசனை

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (12:20 IST)
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டதாக அவர் மீது மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கமல் மீது வழக்கு போட முகாந்திரம் இருந்தால் தாராளமாக வழக்கு போடலாம் என்று அறிவுறுத்தியது



 
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார் கமல் மீது வழக்கு போடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். இந்த நிலையில் இன்று காவல்துறையினர் கமல் மீது வழக்கு போடுவது குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் கமல் மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு போடலாம் என்று முடிவு செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்