செய்வார்கள் என காத்திருந்தது போதும். நம்மால் முடியும். கடமையை செய்ய விரும்புபவர்கள் வாருங்கள். இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டிய தருணம் இது. கடமையை செய்ய யார் முன்வந்தாலும் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். பல்வேறு இயக்கங்கள் நம்முடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறார்கள். வாருங்கள். நியாயத்தூள் கிளப்புவோம்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே, அவர் விரைவில் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்குவார் எனவும், அதற்கான அறிவிப்பே அவரது பிறந்தநாளன்று வெளியாகும் என பெரும்பாலானோரால் நம்பப்பட்டு வருகிறது.
ஆனால், தனது ஆதரவாளர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு மொபைல் ஆப்-பை மட்டுமே அவர் நவம்பர் 7ம் தேதி வெளியிட இருக்கிறார் எனவும், அதற்கான ஏற்பாடுகள்தான் தீவிரமாக நடைபெற்று வருகிறது என ஒரு செய்தி வெளியே கசிந்துள்ளது.