அன்னிய செலவாணி மோசடி வழக்கு: தினகரனுக்கு நீதிபதி கண்டனம்

வியாழன், 26 அக்டோபர் 2017 (12:27 IST)
இங்கிலாந்து நாட்டில் உள்ள 'பார்க்லே' என்ற வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை 'டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக கடந்த 1996ஆம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப்பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.



 
 
இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் தினகரன் நேரில் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
இதன்படி சற்றுமுன்னர் டிடிவி தினகரன் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது குறிப்பிட்ட கேள்விகளை மட்டுமே தன்னிடம் கேட்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, குற்றஞ்சாட்டபட்டவர் இந்த கேள்விகளைத்தான் கேட்க வேண்டும் என்று கேட்பது நீதிக்கு எதிரானது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்