வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா! – அதிமுக நிர்வாகி கைது!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (11:41 IST)
நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தன. மேலும் தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் அரசியல் கட்சியினரையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வந்த அதிமுக நிர்வாகி மாதேஸ்வரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 1 லட்ச ரூபாய் பணம், 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்