தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தேர்தலும் நடைபெற உள்ளதால் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் கொரோனா அச்சம் தரும் வகையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒரு வாக்குசாவடிக்கு மாஸ்க் அணிதல், சானிட்டைசர் தெளித்தல் உள்ளிட்டவற்றிற்காக இரண்டு சுகாதார பணியாளர்கள் இருப்பார்கள். தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை” என கூறியுள்ளார்.