அரசு உயர்நிலை பள்ளியில் போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (21:26 IST)
செல்லாண்டி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் மாவட்ட நீதிபதி அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு  சார்பாக  செல்லாண்டி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திருமதி.M. பாக்கியம் செயலர் ,சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கரூர் அவர்கள் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக சிறப்புரை ஆற்றினார்.

திருமதி ஆர் .சுஜாதா JM. நீதிபதி, கரூர் அவர்கள் குழந்தைகள் துன்புறுத்தல் மற்றும்  போக்சோ சட்டம் சார்பாக கருத்துறை வழங்கினார் .டாக்டர் சிவக்குமார் Psychiatrist, அவர்கள் குழந்தைகள் மனநிலை மற்றும்  குழந்தைகள் உடல்நிலை சம்பந்தமாக அறிவுரை வழங்கினார் இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்