திடீர் திருப்பம்.. பாஜக கூட்டணியை நெருங்கும் பாமக.. ரகசிய பேச்சுவார்த்தையா?

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (08:04 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் பாமக சேரும் என்று கூறப்பட்ட நிலையில் சமீப காலமாக வெளிவந்த தகவலின் படி அதிமுக கூட்டணியில் பாமக சேர்வது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. 
 
இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு ராஜ்யசபா தொகுதி மற்றும் 6 மக்களவைத் தொகுதி பாமகவுக்கு தர அதிமுக ஒப்பு கொண்டதாகவும் அது மட்டும் இன்றி தேர்தல் செலவுக்கு பணம் தரவும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் சேர பாமகவின் முக்கிய தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே பாஜக கூட்டணியில் பாமக சேர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் நான்கு பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி என பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தெரிகிறது. 
 
இருப்பினும் பாமக தான் கடைசிவரை சஸ்பென்ஸ் வைத்து தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிப்பது வழக்கமாக வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்