பரங்கிமலை ரயில் நிலைய பார்க்கிங் மூடப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (16:30 IST)
பரங்கி மலையில் உள்ள மெட்ரோ பார்க்கிங் நிலையம் மூடப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனை அடுத்து ஏற்கனவே பரங்கிமலை மெட்ரோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தி உள்ள பயணிகள் தங்கள் வாகனங்களை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆலந்தூர் மற்றும் நங்கநல்லூர் மெட்ரோ ரயில் பார்க்கிங்கை பயன்படுத்தி கொள்ளுமாறு மக்களுக்கு மெட்ரோ ரயில் நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

வாகன உரிமையாளர்கள் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வாகனங்களை எடுத்துச் செல்லாத பட்சத்தில் வாகனங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பொறுப்பேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆலந்தூர் அல்லது நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கை பயன்படுத்துமாறு மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்