இதனால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் குடிநீர், உணவு, மின்சாரம் இன்றி சுமார் 2,500 பயணிகள் அவதிக்கு உள்ளாகினார். இதனை அடுத்து பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து பயணிகளை சமாதானம் செய்த அதிகாரிகள் உடனடியாக மாற்று ஓட்டுனரை ஏற்பாடு செய்து ரயில் இயக்க வைத்தனர். பணி நேரம் முடிந்துவிட்டது என ரயில் ஓட்டுநர் நடுவழியில் ரயில் நிறுத்தி சென்றதால் அந்த வழியாக செல்லும் பல ரயில்கள் தாமதமாக சென்றதாகவும் இதனால் சுமார் 2500 பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.