ரெட் அலர்ட் வாபஸ்.. சென்னையில் 2 நாட்களுக்கு பின் வெயில்.. திரும்பியது இயல்பு வாழ்க்கை..!

Siva
வியாழன், 17 அக்டோபர் 2024 (07:01 IST)
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது வாபஸ் பெறப்பட்டதாகவும், அதற்கு பதிலாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மட்டும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அது சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

தற்போது 80 கிலோமீட்டர் தொலைவில் சென்னையிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதாகவும், சென்னைக்கு வடக்கே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்ட நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இரண்டு நாட்களுக்கு பின்னர் சென்னையில் தற்போது வெயில் அடித்து வருகிறது என்றும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்கள் என்றும், இனி மழைக்கான ஆபத்து இல்லை என்றும், வடகிழக்கு பருவமழை மட்டுமே இயல்பாக பெய்யும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்