மத்திய அரசு போல் மாநில அரசும் பெட்ரோல் வரியை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ்

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (10:08 IST)
மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தது போல் தமிழக மாநில அரசும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
மத்திய அரசு வரி குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு அதை வரவேற்கிறேன் என்று கூறிய ஓ பன்னீர்செல்வம் மக்கள் நலனை கருதி பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசும் குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
 ஏற்கனவே கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெட்ரோல் டீசலுக்கான வரி குறைக்கப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் குறைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்