அழுக்கிப் போன பழங்களில் ஜூஸ் ....கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

Webdunia
சனி, 27 மே 2023 (16:02 IST)
கோயம்பேடு சந்தையில் எலிகள் கடித்த மற்றும் அழுக்கிப் போன பழங்களை வாங்கி வந்து குறைத்து விலைக்கு விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில்  இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று  சோதனை நடத்தினர். அங்கு, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் அழுப்போன துர்நாற்றம் வீசியுள்ளது.

அந்தக் கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கோயம்பேடு சந்தையில் இருந்து எலிகள் கடித்த மற்றும் அழுகிப் போன பழங்களை வாங்கி வந்து ஜூஸ் போட்டு, குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதுபற்றி கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர், அதில், கடை உரிய  ஆவணமின்றி செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து  அதிகாரிகள் அந்தக் கடைக்கு சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ரூ. 5  ஆயிரம் அபராதம் விதித்தனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்