தேமுதிகவுக்கு ராஜ்யசபா தொகுதி வழங்க முடியாது என அதிமுக திட்டவட்டமாக கூறியுள்ளதை அடுத்து பிரேமலதா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியில் தான் சேருவோம் என்று பிரேமலதா அறிவித்திருந்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு அணிகளும் இதனை ஒப்புக்கொள்ளவில்லை.
அதிகபட்சமாக மூன்று தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு தர முடியும் என அதிமுக மற்றும் பாஜக கூறியதாகவும் பாஜக கூடுதலாக அமைச்சர் பதவி வழங்க ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் இரு அணிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக ராஜ்யசபா தொகுதி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா தொகுதி வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பிரேமலதா பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.