வெளிமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைய வேண்டாம்: தமிழக அரசு

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (18:30 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதை அடுத்து தற்போது வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கும் திண்டாட்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் தற்போது தங்கியிருக்கும் இடங்களை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழகத்தில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தை நோக்கி நடந்தே சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று தற்போது பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்