ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

Siva

செவ்வாய், 22 ஜூலை 2025 (11:15 IST)
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இன்று மேலும் உயர்ந்து ஒரு சவரன் 74 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து உள்ளது தங்கநகை பிரியோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம்  105 ரூபாயும் ஒரு சவரனுக்கு 840யும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தங்கத்தை போலவே வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ 2000 உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,180
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,285
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,440
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,280
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,014
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,129
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,112
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  81,032
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.128.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.128,000.00
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்