ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த முடியுமா?

புதன், 21 ஏப்ரல் 2021 (12:40 IST)
முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 
பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. 
 
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மட்டுமே ஒரு திருமணத்துக்கு 20 பேர் வீதம் அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்களுக்கு கோவில்களுக்கு சென்று வழிபட, பூஜையில் பங்கேற்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்