நீங்க நல்லா இருக்கணும்… உலகம் முன்னேற..! – அமெரிக்க அதிபருக்கு கைலாசா அதிபர் வாழ்த்து!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (15:36 IST)
அமெரிக்க அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பிடனுக்கு நித்தியானந்தா அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி வைரலாகியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அவர் கைலாசா என்ற தனி தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சமீபத்தில் கைலாசா நாட்டிற்கான தங்க நாணயம் உள்ளிட்டவற்றையும் நித்தியானந்தா வெளியிட்டார். இந்நிலையில் தற்போது புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பிடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார் நித்யானந்தா.

அதில் “புராதனமான இந்து மதத்தை கொண்ட ஸ்ரீகைலாசா நாட்டின் சார்பாகவும், இந்து மதத்தை ஏற்றுக்கொண்டுள்ள 2 பில்லியன் மக்களின் சார்பாகாவும் புதிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் அமெரிக்கா மீண்டும் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், உலக அமைதியை உண்டாக்கவும் வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்