அவரை சந்திக்க அவரது சகோதரரும், அமமுக பொது செயலாளருமான டிடிவி தினகரன் பெங்களூர் சென்றுள்ளார். இந்நிலையில் சசிக்கலா உடல்நலம் குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் “சசிக்கலா ஆபத்தான நிலையில் ஐசியூவில் இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை. அவருக்கு சிறிய அளவிலான உடல்நல கோளாறே ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் உணவு சாப்பிட்டார், எழுந்து நடந்தார், நலமாக உள்ளார். 3 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.