பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதாக தகவல்.. தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Mahendran
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (12:18 IST)
பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதாக தகவல் வெளியானதை அடுத்து தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது

சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தில் உள்ள 14 இடங்களில் இந்த சோதனையை நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக உள்ள முகமது அலி என்ற நபர் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த விசாரணை தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக நாகர்கோவிலில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சென்றதாகவும் அங்குள்ள ஒரு வீட்டில் இன்று காலை ஆறு முப்பது மணி முதல் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

 தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருவதை அடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் சோதனை நடக்கும் தெருவுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்