சிங்காநல்லூர் சிக்னல் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்… இயக்குனரால் கடுப்பான பிரபுதேவா!

vinoth

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (09:09 IST)
முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர்  AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், உருவாகும் "சிங்காநல்லூர்  சிக்னல்". இந்த  படத்தின் பூஜை, மற்றும் ஷூட்டிங் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.

ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளதாக படத்தின் இயக்குநர் JM ராஜா தெரிவித்திருந்தார். இந்த படம் தொடங்கியதில் ஏகப்பட்ட குளறுபடிகள் சூழந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஷூட்டிங்கை திட்டமிட்டபடி நடத்தவில்லை என இயக்குனர் பிரபுதேவா கோபத்தில் உள்ளாராம். ஏற்கனவே தான் கொடுத்த தேதிகளில் காட்சிகளை எடுக்காமல் வீணாக்கிவிட்டாராம். இதனால் பிரபுதேவா கோபித்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டே வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இயக்குனர் படப்பிடிப்புத் தளத்தில் உதவி இயக்குனர்கள் அவமரியாதை செய்யும் விதமாக திட்ட பல உதவி இயக்குனர்கள் படத்தில் இருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்