இன்று மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஐந்து பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சரக்கு ரயில் விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் சரக்குகள் சேதமடைந்துள்ளதைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக ரயில்களை கவிழ்ப்பதற்கான சதிகள் நடந்து வருவதும், நேற்று ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர்கள் வைத்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையும் பார்த்தோம்.
அதேபோல், இந்த சரக்கு ரயில் விபத்திற்கான காரணம் சதியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை குறித்து ரயில்வே துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மேற்குவங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.