நல்ல செய்தி விரைவில் வரும்... கடம்பூர் ராஜூ!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (13:03 IST)
தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும் என தகவல். 

 
அக்.15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.  அந்த வகையில் நாட்டின் பல மாநிலங்களில் திரையரங்குகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர், தியேட்டர்களை திறந்தால் மூன்று மணி நேரம் சிறிய இடத்திற்குள் அதிக மக்கள் இருக்கும்படியான சூழல் உண்டாகும். 
 
இருப்பினும் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்